நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்க வாய்ப்புள்ளது. இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றன.நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி ஒவ்வொரு கட்சியும் கூட்டணி கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த மற்றும் தேர்தல் அறிக்கைகள் தயாரிக்க குழு அமைத்து வருகின்றனர். அந்த வகையில் திமுக, அதிமுக, மற்றும் மதிமுக ஆகிய கட்சிகள் தங்களின் தொகுதி பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை அறிவித்துள்ளனர். எப்போதும் போல இம்முறையும் திமுக தேர்தல் அறிக்கை… கனிமொழி […]
மநீம தலைவர் கமலஹாசன் அவர்கள், ராகுல்காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார். டெல்லியில் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் கலந்து கொண்டார் மநீம தலைவர் கமலஹாசன் அவர்கள், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி -ஐ அவரது இல்லத்தில் சந்தித்தார். மக்கள் நலனுக்காகவும், தேச ஒற்றுமைக்காகவும், சக இந்தியனாக ‘பாரத் ஜோடோ யாத்திரையில்’ பங்கேற்றமைக்காக மநீம தலைவருக்கு நன்றி தெரிவித்தார் ராகுல்காந்தி. ஒரு மணி நேரத்திற்குமேல் நீடித்த உரையாடலின்போது, இந்திய அரசியல் சாசனத்துக்கு ஏற்பட்டுள்ள ஆபத்துகள், மக்களிடையே பிளவையும், […]
மாணவர்களிடையே பரவி வரும் போதை பழக்கத்தை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரி மநீம அறிக்கை. மாணவர்களிடையே பரவி வரும் போதை பழக்கத்தை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மநீம வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மநீம, கல்வியில் சிறந்த தமிழகம் என்று பெருமை பேசிக்கொள்ளும் தமிழக அரசு மாணவர்களிடம் ஒழுக்கத்தை போதிக்க தீவிர முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும். மாநிலத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என […]
ஆளும்கட்சிக்கொடி பறக்கலாம்… அடுத்த கட்சிக்கொடி பறக்கக்கூடாதா? பாகுபாடு பார்க்கும் அரசுக்கு கண்டனம் என மநீம அறிக்கை. திண்டுக்கல் மாநகராட்சி பொன்னகரம் பகுதியில் ஏற்கனவே நடப்பட்ட மக்கள் நீதி மய்யக் கொடிக்கம்பமானது அந்தப் பகுதியில் கழிவுநீர் கால்வாய் தோண்டும் பணிக்காக அகற்றப்பட்டது. தற்போது அந்தப் பணி முடிந்த நிலையில், அந்தக் கொடிக் கம்பத்தை மீண்டும் அந்தப் பகுதியில் அமைக்கப் போகும்போது காவல் துறையினர் அதைத் தடுத்து நிறுத்தி உள்ளனர். இந்த நிலையில், இதுகுறித்து ஆளும்கட்சிக்கொடி பறக்கலாம்… அடுத்த கட்சிக்கொடி […]
கமல்ஹசன் முன்னிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்த தமிழ்நாடு பாஜக பொருளாதார அணியின் மாநில துணைத்தலைவர் முனியசாமி. தமிழ்நாடு பாஜக பொருளாதார அணியின் மாநில துணைத்தலைவராக இருந்தவர் முனியசாமி. இந்த நிலையில், இவர் நேற்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில், மநீம கட்சியில் இணைந்துள்ளார். கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு நம்மவர் அவர்கள் வருகை தந்தபோது அவரது முன்னிலையில் திரு.V.முனியசாமி அவர்கள் கட்சியில் இணைந்தார். அப்போது […]
இன்று மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிக்கப்படும் நிலையில், மக்கள் நீதி மய்யம் சார்பில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த வாழ்த்து குறிப்பில், ‘உடல் தடையைத் தளராத மன உறுதியால் தகர்த்து, வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றி காணும் அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் மக்கள் நீதி மய்யம் சார்பில் உலக மாற்றுத் திறனாளிகள் தின வாழ்த்துகள். விடாமுயற்சி, பயிற்சியால் பல்வேறு துறைகளில் வியத்தகு சாதனைபுரியும் போராளிகளுக்குப் பாராட்டுகள். மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள், சலுகைகளைத் தட்டிப் பறிக்காமல், அனைவருக்கும் பிரத்யேக அடையாள அட்டை, உதவித்தொகை, […]
சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் விபத்துகளைத் தடுக்க வேண்டும் என மநீம வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சென்னை-திருச்சி இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் 2018 ஜனவரி முதல் கடந்த ஜூன் மாதம் வரையிலான 4 ஆண்டுகளில் நேரிட்ட விபத்துகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வெளியான தகவல் பெரிதும் அதிர்ச்சி அளிக்கிறது. சாலை விபத்துகளுக்கு வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, போதுமான அளவுக்கு பயன்பாட்டுச் சாலைகள் இல்லாததும், சாலை வடிவமைப்பில் உள்ள குளறுபடிகளும்தான் […]
சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையை மற்றவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிக்காலுக்கான சிறப்பு பாதை திறக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையை மற்றவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு தூரத்து கனவாகயிருந்தவொன்று, அலைகள் வந்து மோதிச்செல்லும் சென்னை கடற்கரையை அருகில் சென்று பார்ப்பது. சாலைக்கும், கடற்கரைக்கும் இடைப்பட்ட […]
விவசாயிகளுக்கு மழையால் ஏற்பட்டுள்ள சேதங்களை கணக்கெடுத்து நிவாரணம் வழங்க விரைந்து நடவடிக்கை வேண்டும் என மநீம வலியுறுத்தல். விவசாயிகள் வரலாறு காணாத மழையால் பரிதவித்து வரும் நிலையில், சேதங்களை கணக்கெடுத்து நிவாரணம் வழங்க விரைந்த நடவடிக்கை வேண்டும் என்று மநீம வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்வேறு இடங்களில் மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளை தமிழக அரசு துரிதப்படுத்த வேண்டும். பேரிடர் […]
நடிகர் கமலஹாசன் நவம்பர் 7-ம் தேதி ரசிகர்களோடு பிறந்தநாள் கொண்டாடுகிறார். பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் 7- ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடவுளார். இந்த பிறந்தநாளை அவர் ரசிகர்களுடன் கொண்டாடவுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், அறுபத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன், தன் காலெடுத்து வைத்த நாள்முதல் இன்றுவரை கலையுலகில் தனிப்பெருங்கலைஞனாக கோலோச்சி வருபவர், கடந்த ஐந்து ஆண்டுகளுக்குமுன் அரசியலில் கால்பதித்த நாள்முதல் நெறிதவறா அரசியலை தேசத்திற்கு அறிமுகப்படுத்தி வருபவர், […]
ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு வரவேற்கத்தக்கது! ஆனால், இது யானைப்பசிக்கு சோளப்பொரி என மநீம அறிக்கை. ஆவின் பால் நிறுவனத்தில் வியாபார நோக்கத்திற்கு விநியோகிக்கப்படும் ஆரஞ்சு நிற பால் லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. லிட்டர் 48 ரூபாயிலிருந்து 60 ரூபாயாக உயர்த்தப்பட்டு இன்று முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த விலை உயர்வுக்கு அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன் போன்ற அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், இதுகுறித்து மநீம ஆவின் பால் கொள்முதல் விலை […]
நகரசபை கூட்டம் கட்சி கூட்டம் போல் நடத்தப்பட்டதாக மநீம கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ‘கடந்த 01-11-2022 அன்று தமிழகத்தில் முதன் முறையாக பகுதி சபை, வார்டு கமிட்டிக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மநீம இதனை வரவேற்று அறிக்கையும் விடுத்திருந்தது. இக்கூட்டங்களானது அரசு நிர்வாகத்தில் மக்களின் பங்களிப்பை அதிகப்படுத்தி ஜனநாயகத்தை வலுப்படுத்தும் என்பதே மநீமவின் நம்பிக்கை, எதிர்பார்ப்பு. நடந்தது என்ன ? தலைநகரான சென்னையில் கூட்டங்கள் நடத்தப்படவில்லை. கூட்டங்கள் நடத்தப்பட்ட பிற மாவட்டங்களில் […]
கனமழையை எதிர்கொள்ள கூடுதல் ஏற்பாடுகள் அவசியம் என்று மநீம அறிக்கை. தமிழகத்தில் தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் மழையால் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்ய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் இதற்கான பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம், ஒருநாள் மழைக்கே சென்னை தத்தளிப்பதாகவும், கனமழையை எதிர்கொள்ள கூடுதல் ஏற்பாடுகள் அவசியம் என்றும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஒரு நாள் மழைக்கே தத்தளிக்கும் சென்னை! கனமழையை எதிர்கொள்ள கூடுதல் ஏற்பாடுகள் அவசியம்! […]
நியாயமான முறையில் நடைபெற்ற போராட்டத்தை ஒடுக்க அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என மநீம அறிக்கை. ஜெயலலிதா மரணம் தொடர்பாக இந்த ஆணையம் கடந்த 3 வருடமாக விசாரணை நடத்தி வந்த நிலையில், இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரண தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து மநீம, நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம், தனது இறுதி அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்தது. இந்த […]
இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது என மநீம ட்வீட். மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது. இதுகுறித்து மநீம தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது. அலுவல் மொழி […]
வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற மாணவர்களை அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி மருத்துவராக அனுமதி வழங்க வேண்டும் என மநீம வலியுறுத்தல். வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற மாணவர்களை அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி மருத்துவராக அனுமதிக்க தமிழக அரசு உடனடியாக ஆணை பிறப்பிக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,’ வெளிநாடுகளில் மருத்துவம் பயின்று, பயிற்சி மருத்துவராகும் வாய்ப்புக்காக காத்திருக்கும் மாணவர்கள் பரிதவிக்கும் சூழல் நிலவுகிறது. எனவே, இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் […]
தமிழக முதல்வர் மணல் கொள்ளையை முற்றிலும் தடுத்து நிறுத்தி, இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என மநீம அறிக்கை. நாமக்கல் மாவட்ட திமுக பொறுப்பாளரும், எம்.பி.யுமான ராஜேஷ்குமார் கட்சிக்காரர்கள் மணல் அள்ள நான் மட்டும்தான் அனுமதி கொடுத்திருக்கிறேன். மற்றவர்கள் எல்லாம் பணம் பெற்றுக்கொண்டு, தனியார் நிறுவனத்துக்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள் என்று பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வந்தது. இதுகுறித்து, மநீம வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கட்சிக்காரர்கள் மணல் அள்ள நான் மட்டும்தான் அனுமதி கொடுத்திருக்கிறேன். மற்றவர்கள் […]
சேவை பெறும் உரிமை சட்டத்தை அடுத்த சட்டமன்ற கூட்டத் தொடரில் அவசியம் நிறைவேற்ற வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல் இலஞ்ச ஊழலைக் கட்டுப்படுத்தி, அரசு சேவைகள் விரைவாகக் கிடைத்திட வழிவகுக்கும் “சேவை பெறும் உரிமை சட்டத்தை” அடுத்த சட்டமன்ற கூட்டத் தொடரில் அவசியம் நிறைவேற்ற வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள மநீம வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக சட்டமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடர் விரைவில் நடத்தப்பட உள்ள சூழலில் “சேவை […]
அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மநீம வலியுறுத்தல். அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி,. அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மக்கள் சிரமப்படுகின்றனர். வழக்கமாக மருந்து கொள்முதல் செய்து மருத்துவமனைகளுக்கு அனுப்பும் தமிழ்நாடு மருத்துவக் கழகம், சில மாதங்களாக போதிய மருந்துகளை […]
எதிர்காலத் தலைமுறையை உருவாக்கும் அறப்பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு தேசிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் என மநீம ட்வீட். இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நிலையில், அரசியல் தலைவர்கள் முதல் மாணவர்கள் வரை அனைவரும் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், மநீம தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மாணவரின் வளர்ச்சியில் பெற்றோரைக் காட்டிலும் ஆசிரியருக்கே பொறுப்பு அதிகம். புத்தகக் கல்வியுடன், ஒழுக்கம், நற்பண்புகளைக் கற்பித்து, மாணவர்கள் வாழ்வில் ஒளியேற்றுவதுடன், சிறந்த எதிர்காலத் தலைமுறையை உருவாக்கும் அறப்பணியில் ஈடுபட்டுள்ள […]