பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்!

Led by Prime Minister Modi Union Cabinet meeting tomorrow!

டெல்லி:பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டம்(CCEA) நாளை ஜனவரி 19 ஆம் தேதி நடைபெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜன.31-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.இதற்கிடையில்,பிப்ரவரி 1 ஆம் தேதி நரேந்திர மோடி தலைமையிலான அரசு 2022-2023 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது.

கொரோனா பரவல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பட்ஜெட் கூட்டத் தொடரானது இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது.முதல் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடரானது ஜனவரி 31 ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 11ஆம் தேதி வரையும், இரண்டாம் கட்ட கூட்டத் தொடரானது மார்ச் 11-ஆம் தேதி முதல் ஏப்ரல் 8-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் முன்னதாக மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில்,பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை  கூட்டம் (CCEA) நாளை ஜனவரி 19 ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இக்கூட்டத்தில் நாட்டின் பொருளாதார விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

unknown node