கைதாகியுள்ள ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது குண்டாஸ் ...!

Kundas law has been passed on teacher Mithun Chakraborty who was arrested in a sex case.

பாலியல் வழக்கில் கைதாகியுள்ள ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது.

கோவையை சேர்ந்த 17 வயது மாணவி பாலியல் தொல்லை காரணமாக கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து உயிரிழந்த நிலையில், மாணவி எழுதி வைத்த கடிதத்தின் அடிப்படையில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மற்றும் தலைமை ஆசிரியர் மீரா ஜாக்சன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

தலைமை ஆசிரியர் மீரா ஜாக்சனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கைதாகி சிறையில் உள்ள ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது குண்டாஸ் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.