கோடநாடு கொலை வழக்கு – சயானிடம் காவல்துறை விசாரணை!

Kodanadu murder and robbery case is being investigated by the police.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சயானிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றன.

நீலகிரி மாவட்டம் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சயானிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றன. போலீஸ் சம்மன் அனுப்பியதால் பழைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சயான் ஆஜரானார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவு, சசிகலா சிறை சென்றதை தொடர்ந்து, கோடநாடு எஸ்டேட்டில் 2017-ஆம் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டு, பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. கொலையில் தொடர்புடையதாக கூறப்பட்ட ஜெயலலிதா கார் ஓட்டுநர் கனகராஜ் 2017ஆம் ஆண்டு விபத்தில் இறந்தார்.

மேலும், கோடநாடு எஸ்டேட்டில் கணிப்பொறி ஆப்ரேட்டராக இருந்த தினேஷ்குமாரும் தற்கொலை செய்துகொண்டார். காவலாளி கொலை வழக்கில் முக்கிய நபரான சயான் குடும்பத்துடன் காரில் தப்பும்போது விபத்தில் சிக்கினார்.

இந்த நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சயானிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றன. சயான் அளிக்கும் வாக்குமூலம் இந்த வழக்கில் முக்கிய திருப்பங்களை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.