கே.கே.வேணுகோபாலின் பதவிக் காலம் மேலும் நீட்டிப்பு..?

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலின் பதவிக் காலம் மேலும் நீட்டிப்பு என தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலின் பதவிக் காலம் மேலும் நீட்டிப்பு என தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் கடந்த 2017-ஆம்  ஜூலை 1-ஆம் தேதி நியமனம் செய்யப்பட்டார். கடந்த 2020 ஆம் ஆண்டு பதவிக்காலம் முடிவடைந்த நிலையில்,  2021- ஜூலை 1 -ஆம் தேதி வரை ஓராண்டுக்கு பதவிக்காலம் நீடிக்கப்பட்டது.

இந்நிலையில், வரும் ஜூலை 1-ஆம் தேதியுடன் பதவி காலம் முடிவடையும் நிலையில் மேலும், ஓராண்டுக்கு கே.கே.வேணுகோபாலின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.