கோரோனோ வைரஸ் பரவுதலை தடுக்க இந்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரளாவில் ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்காமல் இருசக்கர வாகனத்தில் சுற்றி திரிந்த இரு வாலிபர்களை காவல்துறையினர் நிறுத்தியுள்ளனர்.அப்போது அந்த இருசக்கர வாகனத்தில் வந்த நிஷாந் வயது 20 மற்றும் நிஷாடி வயது 22 ஆகிய இருவரையும் காவலர்கள் 144 தடை பிறப்பித்துள்ளதால் ஏன் அதிவேகமாக செல்கிறீர்கள் என கேட்டதற்க்கு அந்த இளைஞர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவலர்கள மீது சரமாரியாக தாக்கியுள்ளனர்.
unknown nodeஅவர்களின் சீருடைகளை கிழித்து அட்டகாசம் செய்துள்ளனர். இதனால் அந்த காவலர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மக்கள் பணியாற்றும் சீர்மிகு காவலர்களை தாக்கிய அந்த நபர்களை கைது செய்த காவல்துறையினர், அவர்கள் மீது அரசு ஊழியரை பணி செய்ய் விடாமல் தடுத்தது,உயிருக்கு ஆபத்தான தொற்று நோய் பரவ காரணமாக இருந்தது உள்ளிட்ட பிரிவுகளின் மீது வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.