கேரளா உள்ளாட்சித் தேர்தல் – பாஜகவிற்கு பின்னடைவு

With the local body by polls in Kerala underway, the BJP is not even present in any of the constituencies.

கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், பாஜக மாநகராட்சியில் ஒரு இடங்களில் கூட முன்னிலையில் இல்லை.

கேரள மாநிலத்தில் 3 கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. கொரோனா கட்டுப்பாடு விதிகளை பின்பற்றி உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தலில் 76 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிமுதல் எண்ணப்பட்டு வருகின்றன.வாக்கு எண்ணிக்கையில் ,ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி கேரளாவில் 6 மாநகராட்சிகளில் 4 இடங்களில் முன்னிலையில் உள்ளது.2 இடங்களில் காங்கிரஸ் கூட்டணியும் முன்னிலையில் உள்ளன.ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாஜக மாநகராட்சியில் ஒரு இடங்களில் கூட முன்னிலையில் இல்லை.