#BREAKING: நாளை செய்தியாளர்களை சந்திக்கும் கமல்ஹாசன்..!

President Kamal Haasan will meet reporters at the People's Justice Center party headquarters tomorrow at 11 am.

நடிகர் ரஜினிகாந்த் இன்று ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில், மக்கள் நீதி மய்யம் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், நாளை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமை அலுவலகத்தில் காலை 11 மணி அளவில் தலைவர் கமலஹாசன்  பத்திரிகையாளர்களை சந்திக்கயுள்ளார். இந்த நிகழ்வுக்கு தமிழ் மற்றும் தேசிய ஊடகங்களின் செய்தியாளர்கள் அன்புடன் வரவேற்கிறோம்.

unknown node

வருகை தரும் அனைவரும் கொரோனா விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டுமென்றும், அதை நிறைவேற்ற செய்தியாளர்கள் ஒத்துழைக்கும் படியும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது கமலஹாசன் தேர்தல் பிரச்சாரம், சுற்றுப்பயணம் தொடர்பாக அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

#BREAKING: நாளை செய்தியாளர்களை சந்திக்கும் கமல்ஹாசன்..!