மக்கள் நலனை முன்னிறுத்தும் நேர்மையான அரசியலை செய்ய தீவிரமாக களத்தில் இருக்கிறோம் என நன்கொடை கேட்டு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ட்வீட்.
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நம்மீது திணிக்கப்பட்டிருக்கும் தரமற்ற அரசியலை மாற்றி, மக்கள் நலனை முன்னிறுத்தும் நேர்மையான அரசியலைச் செய்ய தீவிரமாகக் களத்தில் நிற்கிறோம். பகாசுர ஊழல்பேர்வழிகளை எதிர்த்துப் போராட பணஉதவி செய்யுங்களென உரிமையுடன் உங்களிடம் கேட்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
நேர்மை அரசியலுக்கு நன்கொடை தாருங்கள் என ஊரறிய உலகறிய கேட்கிறோம். இந்தப் பங்களிப்பு நீங்கள் நலமாக வாழ மட்டுமல்ல, உங்கள் தலைமுறையும் நல்ல சூழலில் வாழ்வதற்கும், நீங்கள் விரும்புகிற நேர்மையான அரசும் நல்ல நிர்வாகமும் அமைவதற்கும் செய்யும் முதலீடு என்றும் இங்கே விதைத்ததை நீங்களும் உங்கள் குடும்பமும் நிச்சயம் அறுவடை செய்யும் எனவும் கூறியுள்ளார்.http://www.maiam.com/donateஎன்ற இணையத்தில் நன்கொடை செலுத்தலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
unknown node