#Justnow:அரசு பள்ளி விடுதி மாணவர்களுக்கு;இந்த தொகை உயர்வு – தமிழக அரசு அரசாணை!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி விடுதிகளில் தங்கி பயிலும் 1053 மாணாக்கர்களுக்கு தன்சுத்தம்,உடல் நலம் பராமரிப்பதற்காக,சோப்பு, தேங்காய் எண்ணெய் வழங்குவதற்கான இதர

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி விடுதிகளில் தங்கி பயிலும் 1053 மாணாக்கர்களுக்கு தன்சுத்தம்,உடல் நலம் பராமரிப்பதற்காக,சோப்பு, தேங்காய் எண்ணெய் வழங்குவதற்கான இதர செலவின தொகையை ரூ.30-லிருந்து ரூ.50-ஆக உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக,தமிழக அரசின் அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:

“மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 21.04.2022 அன்று 2022-2023ஆம் ஆண்டிற்கான மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் மானியக் கோரிக்கையின்போது கீழ்காணும் அறிவிப்பினை வெளியிட்டார்:

அதன்படி,”22 அரசு பள்ளி விடுதிகளில் தங்கி பயிலும் 1053 மாணாக்கர்களுக்கு தன்சுத்தம்,உடல் நலம் பராமரிப்பதற்காக வழங்கும், சோப்பு, தேங்காய் எண்ணெய் வழங்குவதற்கான இதர செலவினம் ரூ.30/-லிருந்து ரூ.50/-ஆக உயர்த்தி ரூ.2.52 இலட்சம் செலவில் திட்டம் செயல்படுத்தப்படும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்,அரசு பள்ளி விடுதிகளில் தங்கி பயிலும் 1053 மாணாக்கர்களுக்கு தன்சுத்தம்,உடல் நலம் பராமரிப்பதற்காக,சோப்பு, தேங்காய் எண்ணெய் வழங்குவதற்கான இதர செலவின தொகையை ரூ.30-லிருந்து ரூ.50-ஆக உயர்த்தி வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது”,என தெரிவிக்கப்பட்டுள்ளது.

unknown node