சென்னை : முக்கிய தலைவர்களின் பிறந்தநாள் அன்று சத்துணவு திட்டத்தின் கீழ் 1 முதல் 10 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவுடன் இனிப்பு பொங்கல் வழங்க ரூ.4.27 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீட்டுள்ளது தமிழ்நாடு அரசு. கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு பள்ளித்திறப்பு நாளான ஜூன் 10ஆம் தேதி சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது. இந்நிலையில், 1 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மதிய உணவுடன் இனிப்பு பொங்கல் வழங்க வேண்டும் […]
தமிழ்நாட்டில் நம்ம ஸ்கூல் எனும் புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் முக ஸ்டாலின். தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் நம்ம ஸ்கூல் எனும் புதிய திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்திற்கான பிரத்யேக இணையதளத்தையும் சென்னையில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர். இந்த திட்டம் மூலம் முன்னாள் மாணவர்கள், தனியார் நிறுவனங்கள் அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து மேம்படுத்த முடியும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சிஎஸ்ஆர் நிதியில் பள்ளிகளின் கட்டமைப்பு, ஆய்வகங்கள் […]
அரசு பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நாளை ‘தி ரெட் பலூன்’ படம் திரையிடல். உலக முழுவதும் குழந்தைகளின் பிரியமான விளையாட்டு பொருட்களின் பட்டியலில் பலூன் தவிர்க்க முடியாத ஒன்று. இந்த சூழலில் கற்பனையான, சுவாரசியமான காட்சிகளுடன் உருவாக்கப்பட்ட குழந்தைகளுக்கான படம் தான் 1956-ஆம் ஆண்டு வெளியான ‘தி ரெட் பலூன்’. இந்தப் படம் பிரெஞ்சு மொழியில் ஆஸ்காா் விருது பெற்ற குறும்படமாகும். இந்த படத்தில் 6 வயது சிறுவன் ஒருவன் பள்ளி செல்லும்போது […]
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் உள்ள 13,331 ஆசிரியர் காலிப்பணியிடங்களை பள்ளி மேலாண்மை குழுக்கள் மூலம் தற்காலிக அடிப்படையில் நியமணம் செய்ய தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அதன்படி,அரசு தொடக்கப்பள்ளிகளில் காலியாக உள்ள 4,989 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் மாதம் ரூ.7,500 தொகுப்பூதியத்தில் ஜூலை முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் வரையிலும்,5,154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மாதம் ரூ.10,000 தொகுப்பூதியத்தின் அடிப்படையில் ஜூலை மாதம் முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி வரையிலும், 3,188 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் மாதம் ரூ.12,000 தொகுப்பூதிய […]
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி விடுதிகளில் தங்கி பயிலும் 1053 மாணாக்கர்களுக்கு தன்சுத்தம்,உடல் நலம் பராமரிப்பதற்காக,சோப்பு, தேங்காய் எண்ணெய் வழங்குவதற்கான இதர செலவின தொகையை ரூ.30-லிருந்து ரூ.50-ஆக உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக,தமிழக அரசின் அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: “மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 21.04.2022 அன்று 2022-2023ஆம் ஆண்டிற்கான மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் மானியக் கோரிக்கையின்போது கீழ்காணும் அறிவிப்பினை வெளியிட்டார்: அதன்படி,”22 அரசு பள்ளி விடுதிகளில் தங்கி பயிலும் 1053 மாணாக்கர்களுக்கு தன்சுத்தம்,உடல் […]
தமிழகத்தில் கட்டாய கல்வி சட்டத்தின்கீழ் ஏற்கனவே அரசுப் பள்ளிகளில் மேலாண்மை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.இக்குழுக்கள் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்படாமல் இருந்தன. இந்நிலையில்,தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழுக்களை மறு கட்டமைப்பு செய்யும் திட்டத்தை சென்னை திருவல்லிக்கேணி லேடி வெலிங்கடன் பள்ளியில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்.இதன்மூலம்,37,557 அரசுப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கான முயற்சியாக புதிய மேலாண்மைக் குழுக்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.இக்குழுவுக்கு புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மேலும்,நம் பள்ளி நம் பெருமை என்ற பெயரிலான […]