ஜார்கண்ட் தேர்தல் முடிவுகள்: வாய்ப்பு வழங்கியதற்கு நன்றி- பிரதமர் மோடி

ஜார்கண்ட் மாநிலத்தில் 81 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் 30ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 20 ஆம் தேதிவரை 5 கட்டமாக நடைபெற்றது. இதன் முடிவுகள் நேற்று

ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது.

ஜார்கண்ட் தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் 81 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் 30ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 20 ஆம் தேதிவரை 5 கட்டமாக நடைபெற்றது. இதன் முடிவுகள் நேற்று வெளியானது.வாக்கு எண்ணிக்கையில்  காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சிகள் தொடர்ந்து முன்னிலை வகித்தது.அங்கு ஆளும் கட்சியான பாஜக பின்  தங்கி இருந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையின் முடிவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சிகளே அதிக இடங்களை பிடித்து பெரும்பாண்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.இந்த கூட்டணி கட்சிகளை ஒருங்கினைத்த முக்தி மோர்ச்சா கட்சியின் செயலாளர்  ஹேமந்த் சோரன்  முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

unknown node

இந்நிலையில் இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,  ஜார்க்கண்ட் மாநில மக்களுக்காக இவ்வளவு ஆண்டுகள் பணியாற்ற வாய்ப்பு வழங்கியதற்கு நன்றி. ஜார்க்கண்ட் மாநில வளர்ச்சிக்காக பாஜக தொடர்ந்து செயல்படும் என்று  பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார்.