ஜெய்பீம் படம் பார்த்தேன்; கண்கள் குளமானது...! – கமலஹாசன்

ஜெய்பீம் பார்த்தேன். கண்கள் குளமானது என ஜெய்பீம் படம் குறித்து கமலஹாசன் ட்வீட்.

ஜெய்பீம் பார்த்தேன். கண்கள் குளமானது என ஜெய்பீம் படம் குறித்து கமலஹாசன் ட்வீட்.

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெய் பீம். இப்படத்தை 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

நடிகர் சூர்யா அவர்கள் இப்படத்தில் இருளர், பழங்குடியினருக்காகப் போராடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கண்டு ரசித்த நிலையில், படக்குழுவுக்கும் முதல்வர் அவர்கள் பாராட்டுக்களை தெரிவித்திருந்தார்.

இப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஜெய்பீம்பார்த்தேன். கண்கள் குளமானது.பழங்குடியினரின் இன்னல்களை அழுத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் ஞானவேல்பொதுச் சமூகத்தின் மனசாட்சிக்குக் குரலற்றவர்களின் குமுறல்களைக் கொண்டு சேர்த்த சூர்யா, ஜோதிகா மற்றும் படக்குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.’ என பதிவிட்டுள்ளார்.

unknown node