அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டும் தான் – முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு!

Former minister Kadambur Raju has said that Jayalalithaa is the only permanent general secretary of the AIADMK.

அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டும் தான் என  முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு கோவில்பட்டியில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். பின்பதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஜெயலலிதா மறைவுக்குப்பின் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக நாடாளுமன்ற,  சட்டமன்ற மற்றும் ஊரக உள்ளாட்சி தேர்தல்களை சந்தித்துள்ளது.

அதிமுகவில் இரட்டை தலைமை தான் என்பதை கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை ஏற்றுக்கொண்டுள்ளனர். அதற்காக காட்சியில் சில சட்ட திருத்தங்களும் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் அதிமுகவில் இணைத்துக் கொள்ளப்படுவார்களா என்ற  கேள்வி கேட்பதற்கு இடமில்லை.

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்று கட்சி ஆரம்பித்தவர்கள் மீண்டும் அதிமுகவில் சேர்த்து கொள்வது என்பது நடக்காத காரியம். மேலும், அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா மட்டும்தான் என அவர் கூறியுள்ளார்.