ஜவர்ஹலால் நேரு பிறந்த தினம் : நினைவிடத்தில் சோனியா காந்தி மரியாதை!

As Jawaharlal Nehru celebrates his birthday today, Sonia Gandhi pays homage to his memory.

இன்று ஜவர்ஹலால் நேரு பிறந்த தினம் கொண்டாடப்படும் நிலையில், அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி மரியாதை செலுத்தியுள்ளார்.

1889 ஆம் ஆண்டு நவம்பர் 14-ஆம் தேதி அலகாபாத்தில் பிறந்தவர் தான் பண்டித ஜவஹர்லால் நேரு. இந்தியாவின் முதல் பிரதமரான இவர் குழந்தைகள் மீது மிகுந்த அன்பு கொண்டவர். எனவே இவரது பிறந்த தினம் ஆண்டுதோறும் நாடு முழுவதும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்றும் மறைந்த முன்னாள் பிரதமர் நேரு அவர்களின் 132 வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது.

எனவே, பல்வேறு அரசியல் தலைவர்களும் அவருக்கு வாழ்த்துக்களையும் மரியாதையும் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் டெல்லி சாந்திவான் பகுதியில் உள்ள ஜவஹர்லால் நேரு அவர்களின் நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தியுள்ளார்.

ஜவர்ஹலால் நேரு பிறந்த தினம் : நினைவிடத்தில் சோனியா காந்தி மரியாதை!