விவசாயிகளை ரவுடியுடன் ஒப்பிட்டு பேசுவது வேதனையாக இருக்கிறது – முதலமைச்சர் பழனிசாமி

Tamilnadu Chief Minister Palanisamy yesterday said , it was painful to compare Stalin's peasants with Rowdy .

ஸ்டாலின் விவசாயிகளை ரவுடியுடன் ஒப்பிட்டு பேசுவது வேதனையாக உள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வில்லிசேரி கிராமத்தில் விவசாயிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி கலந்துரையாடினார். அப்பொழுது அவர் பேசுகையில்,ரவுடி ஒருவன் நானும் ரவுடி தான் என்று சொல்லிக்கொள்வான்,அதுபோல் பழனிசாமி விவசாயி என்று சொல்லி பெருமைப்படுவதாக மு.க.ஸ்டாலின்  குறை கூறி வருகிறார்.ஸ்டாலின் விவசாயிகளை ரவுடியுடன் ஒப்பிட்டு பேசுவது வேதனையாக உள்ளது.ஒருநாள் வெயிலில் நின்று வேலை செய்து பாருங்கள் ,அப்போது விவசாயிகளின் கஷ்டம் தெரியும்.விவசாயத்தை பற்றி அவருக்கு என்ன தெரியும்.கஷ்டமே தெரியாமல் வளர்ந்தவருக்கு விவசாயி அருமை பற்றி தெரியுமா ? அவர் ரவுடி ராஜ்ஜியம் நடத்தியதால் விவசாயியை ரவுடியுடன் ஒப்பிட்டு பேசிவருகிறார்.விவசாயிகள் மனம் புண்படும்படியாக இனிமேல் பேச வேண்டாம் என விவசாயிகள் சார்பில் ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன்.