இனிமேல் மெட்ரோ ரயிலில் பயணிக்க இது அவசியம்..! – மெட்ரோ ரயில் நிர்வாகம்

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு முக கவசம் கட்டாயம் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு.

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு முக கவசம் கட்டாயம் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறிப்பாக சென்னையில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் அங்கு அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்றும் மீறினால் அபராதம் மிதிக்கப்படும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு முக கவசம் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இனிமேல் மெட்ரோ ரயிலில் பயணிக்க இது அவசியம்..! – மெட்ரோ ரயில் நிர்வாகம்