உள் ஒதுக்கீடு தீர்ப்பு திமுகவின் சமூகநீதிக் கொள்கைக்கு கிடைத்த மகத்தான வெற்றி என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், அருந்ததியர் சமுதாயத்திற்கு 3% உள் ஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு என 5 பேர் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசனச் சட்ட அமர்வு தீர்ப்பளித்திருக்கிறது.
தி.மு.க., வின் சமூக நீதிக் கொள்கைக்கும், முத்தமிழறிஞர் கலைஞரின் முடிவுக்கும் கிடைத்துள்ள மகத்தான வெற்றி இது.
ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் சமூகநீதி சிந்தனையுடன் செயல்படும் பேரியக்கம். 7.6.1971 அன்று பட்டியலின- பழங்குடியின மக்களுக்கான இட ஒதுக்கீட்டை 18% உயர்த்தியவர் கலைஞர்.
22.6.1990 அன்று 18% இட ஒதுக்கீடு பட்டியல் இனத்திற்கு தனியாக 1% பழங்குடியின மக்களுக்கு என 19% ஆக உயர்த்தியது முத்தமிழறிஞர் தான்.
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட (BC, MBC இட ஒதுக்கீட்டையும் சேர்த்து- 69% இட ஒதுக்கீடுடன் தனித்துவம் பெற்று நிற்கிறது தமிழகம்.
23.1.2008 அன்று சமூக பொருளாதாரத்தில் அடித்தளத்தில் அருந்ததியர் இருப்பதால் அவர்களுக்கு தனியாக உள் ஒதுக்கீடு வழங்கிட அரசு முடிவு செய்துள்ளது’ என அறிவித்தது கலைஞர் அரசு.
27.11.2008 அன்று அருந்ததியினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 3% இட ஒதுக்கீடு வழங்கி அமைச்சரவை தீர்மானம் இயற்றியது தி.மு.க அரசு.
சட்ட முன்வடிவுக்கான கலைஞரின் உரையை உள்ளாட்சித் துறை அமைச்சர் என்ற முறையில் நான் அவையில் எடுத்துரைத்தேன்.
29.4.2009 அன்று இட ஒதுக்கீடு அரசிதழில் வெளியிடப்பட்டது இன்றுவரை அருந்ததியர் சமுதாயத்தினரின் முன்னேற்றத்தில் அந்த உள் ஒதுக்கீடு ஒரு வரப்பிரசாதம்.
அடக்கப்பட்ட – ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக நீதியை நிலைநாட்டியுள்ள மாண்புமிகு உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு தி.மு.க சார்பில் நன்றி.இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
unknown node