அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான வழக்கு.! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் 2 மாதம் இடைக்கால தடை விதித்துள்ளது.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் 2 மாதம் இடைக்கால தடை விதித்துள்ளது.

சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாக கூறி, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதும் அவருக்கு நெருக்கமான குடும்பத்தார்கள் சிலர் மீதும் அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதனை  எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.  இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், ஏற்கனவே, சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கிற்கு இடைக்கால தடை விதித்தது.

அந்த தடையை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும், அமலாக்கத்துறை விசாரணைக்கு அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு ஒத்துழைப்பு தரவில்லை என்றால், அந்த தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கி உத்தரவிடலாம் எனவும் உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.