சேலம் : அதிமுக ஆட்சி காலத்தில் சேலம் தலைவாசலில் கால்நடை மற்றும் விலங்கியல் அறிவியலுக்கான ஒருங்கிணைந்த ஆராய்ச்சி நிலையம் அமைக்க திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால், திட்டம் திமுக ஆட்சியில் அந்த திட்டத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை என எதிர்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலன், கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிக்கை வெளியீட்டு விளக்கம் அளித்துள்ளார். அந்த […]
தூத்துக்குடி விமான நிலையத்திற்கு சிவந்தி ஆதித்தனார் பெயரை வைக்க வேண்டும் என திமுக நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை குழுவிடம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பரிந்துரை செய்துள்ளார். இதோடு தூத்துக்குடி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இதையடுத்து திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு மக்களிடம் கருத்துக்களை கேட்டு வருகிறது. இதில், திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையிலான […]
2023இல் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு உறுதியாக நடைபெறும். – கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன். தமிழக வீர விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதித்திருந்த போது, 2017ஆம் ஆண்டு எழுந்த பெரும் போராட்டத்திற்கு பிறகு ஜல்லிக்கட்டு போட்டி தமிழகத்தில் நடத்த சிறப்பு சட்டம் உருவாக்கப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன. இருந்தும், அதனை எதிர்த்து விலங்குகள் நல அமைப்பான பீட்டா அமைப்பு ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடைவிதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. இந்த மனுமீதான விசாரணை நடைபெற்று […]
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் 2 மாதம் இடைக்கால தடை விதித்துள்ளது. சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாக கூறி, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதும் அவருக்கு நெருக்கமான குடும்பத்தார்கள் சிலர் மீதும் அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், ஏற்கனவே, சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கிற்கு இடைக்கால தடை விதித்தது. அந்த தடையை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டித்து உச்சநீதிமன்றம் […]
சென்னை:நாகப்பட்டினம் மாவட்டம் சாமந்தன் பேட்டை கிராமத்தில் தூண்டில் வளைவுடன் கூடிய சிறு துறைமுகங்கள் அமைக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மீன்வளம்,மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையின் 3-வது நாள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை ரீதியான அமைச்சர்கள் பதில் அளித்து வருகிறார்கள். இந்நிலையில்,சட்டபேரவையில் தற்போது நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஆளுர் ஷா நாவாஷ்,சாமந்தன் பேட்டை கிராமத்தில் தூண்டில் வளைவுடன் சிறிய துறைமுகம் அமைக்கபடுமா? […]
படகிலிருந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை தூக்கி சென்று கரை சேர்த்த மீனவர். திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில், உப்பங்கழி ஏரியில் மண்ணரிப்பு ஏற்படுவது தொடர்பாக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஆட்சியர் மற்றும் எம்எல்ஏக்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 7 பேர் மட்டுமே பயணிக்கக் கூடிய படகில் அமைச்சருடன் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர். இதனால் பாரம் தாங்காமல் படகு ஒரு புறமாக சாய தொடங்கியதால், படகில் பயணம் மேற்கொண்டவர்கள் அச்சம் அடைந்தனர். இதனையடுத்து அமைச்சர் பயணித்த படகில் […]