ராணுவத்திற்கு #CAR816- துப்பாக்கிகள் தயார்!-அமீரகம் அசத்தல்

இந்தியாவுக்கு தேவையான துப்பாக்கிகளை தயாரித்து தர தயார் என்று ஐக்கிய  அரபு அமீரகம் அறிவித்துள்ளது.

இந்தியாவுக்கு தேவையான துப்பாக்கிகளை தயாரித்து தர தயார் என்று ஐக்கிய  அரபு அமீரகம் அறிவித்துள்ளது.

இது குறித்து அந்நாட்டை சேர்ந்த ஆயுத உற்பத்தியாளர்களான காரல் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அந்நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்:

நாங்கள் தயாரிக்கும் சிஏஆர் 816 ரக துப்பாக்கிகளை  இந்திய ராணுவத்திற்கு தயாரித்து தர தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும் அந்நிறுவனமானது மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 9ஆயிரத்து 895  துப்பாக்கிகளை தயாரிக்க முன்வந்துள்ளது. துப்பாக்கிகளை தயாரிக்க தேவையான  நிலம்,உள்ளூர் முதலிட்டாளர்கள் ஆகியவற்றை வழங்கினால் விரைவாக தயாரிக்கும் பணியானது நடைபெறும்  என்று தெரிவித்துள்ளது.