இந்தியா கொரோனா பாதிப்பு நிலவரம்.. 4,03,738 பேருக்கு தொற்று உறுதி..!

In the last 24 hours, 4,03,738 people have been affected by corona and 4,092 have died.

கடந்த 24 மணி நேரத்தில் 4,03,738 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டும், 4,092 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை படி கடந்த 24 மணி நேரத்தில் 4,03,738 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டும், 4,092 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 4,03,738 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் கொரோனாவால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 2,22,96,414 ஆக அதிகரித்துள்ளது. 4,092 பேர் உயிரிழந்துள்ளதால் உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கை 2,42,362 ஆக உள்ளது. இந்தியாவில் நேற்று 4,01,078 பேரும், நேற்று முன்தினம் 4.14 லட்சமும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 3,86,444 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை, 1,83,17,404 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். அதே நேரத்தில் கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக இந்தியாவில் 16,94,39,663 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் 37,36,648 பேர் சிகிக்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகமாக  பாதிக்கப்பட்ட முதல் ஐந்து மாநிலங்களில் மகாராஷ்டிராவில் 56,578 பேரும், கர்நாடகாவில் 47,563 பேரும், கேரளாவில் 41,971 பேரும், தமிழகத்தில் 27,397 பேரும், உத்தரபிரதேசத்தில் 26,636 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் இந்த ஐந்து மாநிலங்களில் இருந்து புதிதாக 49.58 சதவீதம் பேர் கொரோனாவால் பாதிக்கபப்ட்டுள்ளனர். அதிலும், குறிப்பாக 14.01 சதவீதம்  மகாராஷ்டிராவில் மட்டுமே பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நடந்த 4,092 பேர் உயிரிழப்பில் மகாராஷ்டிராவில் 864 பேர், கர்நாடகாவில் 482 பேர் உயிழந்துள்ளனர்.

இந்தியா கொரோனா பாதிப்பு நிலவரம்.. 4,03,738 பேருக்கு தொற்று உறுதி..!