சசிகலா வருகையை கொண்டாடும் விதமாகவே ஜெ. நினைவிடம் திறப்பு – டிடிவி தினகரன்..!

The Jayalalithaa memorial has been opened to celebrate the arrival of Sasikala TTV Dinakaran said.

சசிகலா வருகையை கொண்டாடும் விதமாகவே ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பிறகு சசிகலாவை வீட்டிற்கு அழைத்து செல்வோம் என டிடிவு தினகரன் என தெரிவித்தார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் பெங்களூரு – பரப்பன அக்ரஹாராத்தில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டு சிறைத்தண்டனை பெற்று வந்த சசிகலா இன்று விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், டிடிவி தினகரன் சசிகலாவை பார்க்க விக்டோரியா மருத்துவமனைக்கு சென்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த போது, அமமுக – அதிமுக இணையுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அரசியல் பற்றி பேச விரும்பவில்லை எனக் குறிப்பிட்டார்.

மேலும், ஜெயலலிதா நினைவிடத் திறப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஜெயலலிதா நினைவிடம் திறப்பதை பார்க்கும்போது சசிகலா விடுதலையை கொண்டாடுவது போல்தெரிகிறது. மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று சசிகலாவை அழைத்துச் செல்வோம், அதிமுகவை மீட்டெடுத்து உண்மையான அம்மா ஆட்சியை கொடுப்போம் என டிடிவு தினகரன் என தெரிவித்தார்.

சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.