வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கூடல் நகரில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர் கொலை செய்யப்பட்டுள்ளதை குறிப்பிட்டு, விரைவில் ஆன்லைன் சூதாட்டத்தை கட்டுப்படுத்தாவிட்டால் பெரும் பிரச்சனையாக உருவெடுக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இது குறித்து பதிவிட்டுள்ள அவர், சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தாலும் இதுவரை எந்த விசாரணையும் இல்லை. எனவே உச்சநீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்காமல் தமிழக அரசு திருத்தப்பட்ட ஆன்லைன் தடை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
unknown nodeunknown nodeunknown nodeunknown node