நாம் அதிமுக கூட்டணியில் இல்லை என்றால் இன்று அதிமுக என்ற கட்சியே தெரிந்திருக்காது – சுதீஷ்

"If we were not in the AIADMK alliance in the 2011 elections, the AIADMK would not be known today," he said.

2011 தேர்தலில் நாம் அதிமுக கூட்டணியில் இல்லை என்றால் இன்று அதிமுக என்ற கட்சியே தெரிந்திருக்காது என தேமுதிக சுதீஷ் தெரிவித்துள்ளார்.

தேமுதிக ஆலோசனை கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், 2011 தேர்தலில் நாம் அதிமுக கூட்டணியில் இல்லை என்றால் இன்று அதிமுக என்ற கட்சியே தெரிந்திருக்காது என பேசிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், கூட்டணிக்காக அவர்களை தேடி நாம் செல்லவில்லை, அவர்கள்தான் நம் பின்னாடி வந்து கொண்டியிருக்கிறார்கள் என பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக  41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 இடங்களில் வெற்றி பெற்றது. அதில், பல தேமுதிக எம்எல்ஏக்கள் கட்சி மாறி சென்றுவிட்டனர். 2016 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக 104 தொகுதிகளில் போட்டியிட்டது. அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியைச் சந்தித்தது. அதுபோல, 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் தேமுதிக தோல்வியைச் சந்தித்தது என்பது குறிப்பிடப்படுகிறது.