அகிம்சை முறைப்படி போராட்டம் நடத்தினால் பிரச்னை ஏற்படாது – முதலமைச்சர் பழனிசாமி

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார்.எனவே முதலமைச்சர் பழனிசாமி டெல்லி

முதலமைச்சர் பழனிசாமி டெல்லி சென்றுள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தினால் உள்ளாட்சி தேர்தலில் எந்த பாதிப்பும் வராது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார்.எனவே முதலமைச்சர் பழனிசாமி டெல்லி சென்றடைந்தார்.இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  ஜனநாயக நாட்டில் அகிம்சை முறைப்படி போராட்டம் நடத்தினால் பிரச்னை ஏற்படாது .

குடியுரிமை திருத்தச் சட்டத்தினால் இந்தியாவில் வாழும் இந்தியர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை .இலங்கை வாழ் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை என்பதே எங்களின் கொள்கை.உச்சநீதிமன்ற உத்தரவுப்படி உள்ளாட்சி தேர்தல் உறுதியாக நடைபெறும் .குடியுரிமை திருத்தச் சட்டத்தினால் உள்ளாட்சி தேர்தலில் எந்த பாதிப்பும் வராது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.