நான் இன்னும் என் வார்த்தைக்கு துணை நிற்கிறேன் – முதல்வர் பினராயி விஜயன்

"I have no doubt that the LDF will get more seats than ever before," said Vijayan.

எல்.டி.எஃப் முன்பைவிட அதிக இடங்களைப் பெறும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என பிறவி விஜயன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 6ம் தேதி கேரளாவில் உள்ள 140 இடங்களில் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் உள்ள 140 தொகுதிகளில், 2.74 கோடி வாக்காளர்களில் 73.58 சதவீதம் பேர் வாக்களித்தனர். முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான தற்போதய இடது முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மற்றும் பாஜக என மும்முணைப் போட்டி நிலவுகிறது.

இதனிடையே, நேற்று கேரள சட்டமன்ற தேர்தலுக்கான பிந்தைய கருத்துக்கணிப்பை ரிபப்ளிக் டிவி மற்றும் சிஎன்எக்ஸ் நடத்தி வெளியிட்டிருந்தது. அதில், பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி கூட்டணி தொடர்ந்து இரண்டாவது முறை வெற்றி பெறும் என்று கணித்துள்ளது. சிபிஎம் கூட்டணி 72-80, காங்கிரஸ் கூட்டணி 58-64, பாஜக கூட்டணி 1-5 இடங்களை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இதுகுறித்து பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், எல்.டி.எஃப் முன்பைவிட அதிக இடங்களைப் பெறும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்றும் நான் இன்னும் என் வார்த்தைக்கு துணை நிற்கிறேன் எனவும் கூறியுள்ளார்.  எனவே, தேர்தல் முடிவுகள் அறிவிக்க இன்னும் சில மணிநேரங்கள் மட்டுமே உள்ளன. ஆகையால், ஞாயிற்றுக்கிழமை வரை காத்திருப்போம் என்றார்.