புதுடெல்லி செல்வதற்காக திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் சென்று கொண்டிருந்த போது, ஆளும் சிபிஐ(எம்)ன் மாணவர் பிரிவான இந்திய மாணவர் கூட்டமைப்பு (எஸ்எஃப்ஐ) அவரது காரை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கவர்னர் ஆரிப் முகமது கான், கேரள முதல்வர் பினராயி விஜயன் தனக்கு உடல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்த முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். இந்த சம்பவம் தற்செயலான சம்பவம் […]
தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று,கொல்லம்,இடுக்கி,வயநாடு, பத்தனம்திட்டா,பாலக்காடு,திருவனந்தபுரம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு இன்று (ஜன.14) பொங்கல் விடுமுறை அறிவித்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் தமிழ் பேசும் மக்கள் அதிகம் வாழும் 6 மாவட்டங்களுக்கு ஜனவரி 14 ஆம் தேதியில் பொங்கல் பண்டிகையை கொண்டாட உள்ளூர் விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று கோரி,கேரள முதலமைச்சருக்கு,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில்,தமிழ் பேசும் மக்கள் பெருமளவில் வாழும் கேரளாவின் 6 மாவட்டங்களில் பண்டிகைக்கு உள்ளூர் […]
கொரோனாவில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு வீட்டில் வைத்து ஒரு மணிநேரம் இறுதிச்சடங்கு செய்ய கேரள அரசு அனுமதியளித்துள்ளது. கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கொரோனா பாதிப்பு குறித்து அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பினராயி விஜயன், கொரோனா பெருந்தொற்று தொடங்கிய நாளிலிருந்து மக்கள் பலவிதமான சங்கடங்களை சந்தித்து வருவதாக தெரிவித்துள்ளார். முக்கியமாக உயிரிழந்தவர்களின் உடலை வீட்டுக்கு எடுத்து வந்து இறுதிச்சடங்கு செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது மிகுந்த வேதனை […]
பெண்களுக்கு எதிரான எந்தவொரு கேவலமான வார்த்தைகளும் கேரளாவின் பள்ளி பாடப்புத்தகங்களில் இடம் பெறாது என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்ததை,எம்.பி. கனிமொழி வரவேற்றுள்ளார். கேரளாவில் அடுத்தடுத்து இளம் பெண்கள் வரதட்சணைக் கொடுமையால் உயிரிழந்த சம்பவம் பினராயி விஜயன் தலைமையிலான அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்,மாநிலத்தில் பாலின சமத்துவம் மற்றும் சம உரிமைகளை மேம்படுத்துவதற்காக பெண்களுக்கு எதிரான எந்தவொரு கேவலமான சொற்களும் இடம்பெறாத வகையில்,கேரளாவின் பள்ளி பாடப்புத்தகங்கள் திருத்தப்பட்டு தணிக்கை செய்யப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் […]
எல்.டி.எஃப் முன்பைவிட அதிக இடங்களைப் பெறும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என பிறவி விஜயன் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 6ம் தேதி கேரளாவில் உள்ள 140 இடங்களில் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் உள்ள 140 தொகுதிகளில், 2.74 கோடி வாக்காளர்களில் 73.58 சதவீதம் பேர் வாக்களித்தனர். முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான தற்போதய இடது முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மற்றும் பாஜக என மும்முணைப் போட்டி நிலவுகிறது. இதனிடையே, […]
கேரள தங்க கடத்தல் வழக்கில் அம்மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு எந்தொரு தொடர்பும் இல்லையென என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன், 15 கோடி ருபாய் மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில் தொடர்புத் துறையில் மேலாளராக பணியாற்றும் ஸ்வப்னா சுரேஷூக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயரை பெங்களூரில் கைது செய்து, கொச்சியில் என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். […]
மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழக தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் என்று கேரள முதலமைச்சருக்கு ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். கேரளாவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அதிலும், இடுக்கி மாவட்டத்தில்தொடந்து கனமழை பெய்தது. இதனிடையே ராஜமலை பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான தேயிலை தோட்ட பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த தோட்டத்தில் வேலை செய்பவர்கள் பெரும்பாலும் தமிழகத்தை சார்ந்தவர்கள். நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை […]
கேரள நிலச்சரிவு மீட்பு பணிகளுக்கு தேவையான உதவிகளை செய்ய தயார் என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். கேரளாவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அதிலும், இடுக்கி மாவட்டத்தில்தொடந்து கனமழை பெய்தது. இதனிடையே ராஜமலை பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான தேயிலை தோட்ட பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த தோட்டத்தில் வேலை செய்பவர்கள் பெரும்பாலும் தமிழகத்தை சார்ந்தவர்கள். நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக தமிழக […]
கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நேற்று துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் இந்தியர்கள் கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக விமானம் ஓடுபாதையில் சறுக்கிக்கொண்டு விமானியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 2 விமானிகள் உட்பட 18 பேர் உயிழந்துள்ளனர்.காயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். […]
நிலச்சரிவு தொடர்பாக கேரளா முதலமைச்சருக்கு தமிழக முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கேரளாவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அதிலும், இடுக்கி மாவட்டத்தில்தொடந்து கனமழை பெய்து வருகிறது. இந்த மாவட்டத்தில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.இதனிடையே ராஜமலை பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான தேயிலை தோட்ட பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த தோட்டத்தில் வேலை செய்பவர்கள் பெரும்பாலும் தமிழகத்தை சார்ந்தவர்கள். இங்கு இருந்த 20 வீடுகளில் 80-க்கு மேற்பட்டோர் […]
கேரளதங்க கடத்தல் வழக்கில் முதல்வர் பினராயி விஜயன் பதவி விலகக் கோரி ஒருநாள் ‘சத்தியாக்கிரகத்தை’ ரமேஷ் சென்னிதாலா மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து கூறிய, சொந்த அலுவலகத்தை நிர்வகிக்க முடியாவிட்டால் முதல்வர் அதிகாரத்தில் இருக்க உரிமை இல்லை என்றும் ஊழல்வாதிகளை முதலமைச்சர் பாதுகாக்கிறார். ஊழல் தடுப்புத்துறை மாநிலத்தில் ஊழலுக்கு ஆதரவளிப்பதாக காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா தெரிவித்தார். இந்த வழக்கை சிபிஐ விசாரணையை விசாரிக்க வேண்டும், முதலமைச்சர் அதிகாரத்தில் தொடர எந்த ஒழுக்கமும் இல்லை எனவே முதல்வர் பதவி விலகக் […]