"மிகவும் வருந்தினேன்...இவர் இடதுசாரி கருத்துகளை மக்களிடம் கொண்டு சென்றவர்" – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

தமிழ் சினிமாவில் இயக்குநர் சசி இயக்கத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு பூ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் ராமு.இதனால் இவர் பூ ராமு என்று

தமிழ் சினிமாவில் இயக்குநர் சசி இயக்கத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு பூ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் ராமு.இதனால் இவர் பூ ராமு என்று அழைக்கப்பட்டார்.இந்த படத்தை தொடர்ந்து நீர்ப்பறவை, தங்கமீன்கள்,பரியேறும் பெருமாள்,கர்ணன்,சூரரை போற்று போன்ற பல திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பெற்றார்.

இந்த நிலையில்,நடிகர் பூ ராமுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்பட்டதையடுத்து,சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவர் உயிரிழந்தார்.அவரது மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.மேலும்,அவரது மறைவுக்கு திரைத்துறையினர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்,நடிகர் பூ ராமுவின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக,அவர் தனது இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“தனது திரையுலக நடிப்பால் தமிழக மக்களின் நெஞ்சங்களில் இடம் கொண்ட ராமு அவர்கள் உடல்நலக்குறைவால் மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.

நடிகர் தோழர் பூ வீதி நாடகக் கலைஞராக இடதுசாரி கருத்துகளை மக்களிடம் கொண்டு சென்ற அவரது பணியை முற்போக்காளர்கள் என்றும் நினைவுகூர்வார்கள்.பூ திரைப்படத்தின் வழியாகத் தனது நடிப்பாற்றலால் திரையுலகில் தடம் பதித்த அவர்,நெடுநல்வாடை. பரியேறும் பெருமாள் போன்ற திரைப்படங்கள் வழியாகத் தனக்கென மக்களின் மனங்களில் தனியிடம் பெற்றார் என்றே சொல்ல வேண்டும்.

தனது பயணத்தை நிறைவுசெய்துகொண்ட தோழர் பூ ராமு அவர்களது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர், திரையுலக கலைஞர்கள் உள்ளிட்டதோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.

unknown node