அன்பழகன் மறைவு செய்தி கேட்டு வருத்தமடைந்தேன்- ஓம் பிர்லா

அன்பழகன் மறைவு செய்தி கேட்டு வருத்தமடைந்தேன்என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

அன்பழகன் மறைவு செய்தி கேட்டு வருத்தமடைந்தேன்என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் (97) உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் அன்பழகன் மறைவுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இரங்கல் தெரிவித்துள்ளார்.

unknown node

இது தொடர்பாக ஓம் பிர்லா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,நாடாளுமன்ற மக்களவை முன்னாள் உறுப்பினரும் முதுபெரும் அரசியல் தலைவரும், சிறந்த நிர்வாகியும் தி.மு.க பொதுச்செயலருமான திரு க. அன்பழகன் அவர்களின் மறைவு குறித்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.