ஜனவரி முதல் அனைத்து மாவட்டங்களிலும் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடங்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ்!

Home search education program to be launched in all districts from January - Minister Anbil Mahesh!

ஜனவரி முதல் அனைத்து மாவட்டங்களிலும் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடங்கப்படும் என பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

கொரோனா காலத்தில் மாணவர்களின் கல்வித் திறன் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக தமிழக அரசு சார்பில் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதாவது மாணவர்கள் பள்ளி சென்று வீடு திரும்பிய பின் இல்லம் தேடி கல்வி மையங்களில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மாலை 5 மணி முதல் 7 மணி வரை பெற்றோர்கள் மாணவர்களை அனுப்பி வைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனவரி மாதம் முதல் அனைத்து மாவட்டங்களிலும் இல்லம் தேடி கல்வித் திட்டம் செயல்படுத்த உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார். திருச்சி, தஞ்சை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.