இந்தியாவின் முன்னோடி திட்டமாக இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுகிறது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள், கொரோனாவால் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இடைவெளியை குறைக்கத்தான் இல்லம் தேடி கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், தற்பொழுது இந்த திட்டம் இந்தியாவின் முன்னோடி திட்டமாக செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஜனவரி முதல் அனைத்து மாவட்டங்களிலும் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடங்கப்படும் என பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் மாணவர்களின் கல்வித் திறன் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக தமிழக அரசு சார்பில் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதாவது மாணவர்கள் பள்ளி சென்று வீடு திரும்பிய பின் இல்லம் தேடி கல்வி மையங்களில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மாலை 5 மணி முதல் […]