தெலுங்கு நடிகர் கிருஷ்ணா மறைவு இந்திய திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்.
தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகரும், நடிகர் மகேஷ்பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா, ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக நேற்று அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அந்த ட்வீட்டர் பதிவில், ‘பழம்பெரும் தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் மறைவு வருத்தமளிக்கிறது. தெலுங்கு சினிமாவில் பல புதுமைகளுக்கு முன்னோடியாக இருந்தவர்.
அவரது மறைவு இந்திய திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. என் இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
unknown node