இவரது மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு – முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

உத்திர பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.

உத்திர பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.

உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சி நிறுவருமான முலாயம் சிங் யாதவ், கடந்த ஒரு வாரமாக ஹரியானாவின் குருகிராமில் உள்ள வேதாந்தா மருத்துவமனையில் ஐயூசிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், முலாயம் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், உபி-ன் முன்னாள் முதலமைச்சரும், மூத்த தலைவருமான முலாயம் சிங் யாதவ் மறைவு வருத்தம் அளிக்கிறது; மதச்சார்பற்ற கொள்கைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார் முலாயம் சிங். அவரது மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு.’ என தெரிவித்துள்ளார்.

மேலும், முலாயம் சிங் அவர்களின் துக்க நிகழ்வில் தமிழக அரசு சார்பில் டி.ஆர்.பாலு அவர்கள் கலந்து கொள்வார் என்றும் தெரிவித்துள்ளார்.

unknown node
இவரது மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு – முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்