முதல்வர் தந்தை வழியில் நல்லாட்சி நடத்தி வருகிறார் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

Minister of People's Welfare Ma Subramanian said that the Chief Minister is conducting good governance in the father's way.

முதல்வர் தந்தை வழியில் நல்லாட்சி நடத்தி வருகிறார் என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு கோடி மக்களுக்கு வீடு தேடி மாத்திரை, மருந்து வழங்கும் மக்களை தேடி மருத்துவம் எனும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்பொழுது இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 39 லட்சத்துக்கும்  மேற்பட்டோர் பலன் அடைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் தனது தந்தையின் வழியில் தமிழ்நாட்டை முதல்வர் நல்லாட்சியில் நடத்தி வருகிறார் எனவும் கூறியுள்ளார்.