#Breaking:ஹரியானாவில் கருப்பு பூஞ்சை நோய்க்கு 50 பேர் பலி – முதல்வர் மனோகர் லால் கட்டர்..!

Haryana Chief Minister Manohar Lal Khattar has said that 50 people have died due to black fungus.

ஹரியானாவில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டர் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா வைரஸின் இரண்டாம் அலையானது மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதாவது,கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிகையும் அதிகரித்த நிலையில்,கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வருபவர்களுக்கு, கருப்பு பூஞ்சை பாதிப்பும் பரவத் தொடங்கியது.இதனையடுத்து,கருப்பு பூஞ்சை பாதிப்பால் பலர் உயிரிழந்து வருகின்றனர்.

அந்த வகையில்,ஹரியானாவில் இதுவரை கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பால் 50 பேர் உயிரிழந்துள்ளனர் என்று முதல்வர் மனோகர் லால் கட்டர் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும்,இதுகுறித்து முதல்வர் மனோகர் லால் கட்டர் கூறியதாவது, “ஹரியானாவில் இதுவரை 750 க்கும் மேற்பட்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.தற்போது,ஐம்பத்தெட்டு பேர் குணமடைந்துள்ளனர்.அதே நேரத்தில்,இதுவரை கருப்பு பூஞ்சை பாதிப்பால் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும், மருத்துவமனைகளில் 650 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்”,என்று தெரிவித்துள்ளார்.

#Breaking:ஹரியானாவில் கருப்பு பூஞ்சை நோய்க்கு 50 பேர் பலி – முதல்வர் மனோகர் லால் கட்டர்..!