தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில்,கைவினைஞர்களின் நலனுக்காக ரூ. 3.94 கோடி செலவில்காஞ்சிபுரம், திருநெல்வேலி, பெரம்பலூர் ஈரோடு,சேலம்,விழுப்புரம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 7 பொது பயன்பாட்டு மையங்களை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்அவர்கள் இன்று தலைமைச்செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக திறந்து வைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து,கைவினைத் தொழிலுக்காகவே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட 65 வயதுக்கு மேற்பட்ட 10 சிறந்த கைவினைஞர்களுக்கு வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதுகளையும், கைத்திறத் தொழிலின் பங்களிப்பு, அபிவிருத்தி மற்றும் படைப்புகள் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் 10 கைவினைஞர்களுக்கு பூம்புகார் மாநில விருதுகளையும் முதலமைச்சர்ஸ்டாலின்அவர்கள் வழங்கினார்.
unknown node