குஜராத் முதல்வர் விஜய் ருபானிக்கு கொரோனா பரிசோதனை

Gujarat chief minister Vijay Rupani on Sunday tested negative for coronavirus disease

குஜராத் முதல்வர் விஜய் ருபானி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவருக்கு பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா எனும் நகரில் பிப்ரவரி 15 அன்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய போது குஜராத் முதல்வர் விஜய் ருபானி திடீரென மயங்கி விழுந்தார்.இதனால் முதல்வர் விஜய் ருபானி அகமதாபாத் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதல்வருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன்பின் பிரதமர் மோடி  முதல்வர் விஜய் ருபானியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல்நிலை குறித்து விசாரித்து அறிந்தார்.

இந்நிலையில் குஜராத் முதல்வர் விஜய் ருபானி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.பரிசோதனையில் அவருக்கு பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.