#BREAKING: ஆளுநர் மளிகை செல்கிறார் முதல்வர் நாராயணசாமி..!

Having lost the majority, the Chief Minister goes to the House of Governors to meet the Deputy Governor.

பெரும்பான்மையை இழந்த நிலையில், துணை நிலை ஆளுநரை சந்திக்க முதல்வர் ஆளுநர் மாளிகைக்கு செல்கிறார்.

புதுச்சேரி நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். சட்டப்பேரவையில்  முதல்வர் நாராயணசாமி கொண்டுவந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் தோல்வியடைந்ததாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

மத்திய பாஜக அரசு மற்றும் எதிர்க்கட்சிகள் மீது கடும் விமர்சனங்களை முன் வைத்து பேசிய முதல்வர் நாராயணசாமி பேரவையில் இருந்து வெளியேறினர். இந்நிலையில், புதுச்சேரி அரசு பெரும்பான்மையை இழந்த நிலையில், துணை நிலை ஆளுநரை சந்திக்க முதல்வர் ஆளுநர் மாளிகைக்கு செல்கிறார்.