கடந்த 10-ஆம் தேதி, புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தனது பதவியை ராஜினாமா செய்வதாக, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு கடிதம் எழுதி இருந்தார். ஆதிக்க சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி அமைச்சராக நீடிக்க இயலாது என்பதை உணர்ந்து எனது அமைச்சர் பதவியை நான் ராஜினாமா செய்கிறேன். இதற்காக எனது தொகுதி மக்களிடம் நான் மனமார்ந்த மன்னிப்பினை கேட்டுக்கொள்கிறேன். மேலும் என் மக்களுக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினராக என் பணியினை தொடர்ந்து ஆற்றுவேன் என உறுதி அளிக்கிறேன். […]
அண்ணன் ரங்கசாமி என தற்போதைய புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் அன்பாக அழைத்து முதுகில் குத்தி வருகிறார். – புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி. புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசுகையில், தற்போது புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மீதும், புதுச்சேரி ஆளுநர்கள் மீதும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வைத்து பேசினார். அவர் கூறுகையில், நாங்கள் ஆட்சி செய்யும் போது ஆளுநராக இருந்த கிரண்பேடி எங்களுக்கு தொல்லை கொடுத்தார். அதனை […]
ஆதீனங்கள் மடங்களைவிட்டு வெளியே வந்து அரசியல் பேசலாம் என்று புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் பேட்டி. கோயில்களில் நடைபெறும் சில தவறுகளை தடுக்க வேண்டியது அமைச்சர்களின் கடமை என்று புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், கோயில்களில் நடைபெறக்கூடிய தவறுகளை தடுக்கும் பணியைத்தான் அமைச்சர் சேகர்பாபு செய்து வருகிறார். மத அரசியல் செய்து மீண்டும் ஆட்சியை பிடிக்கலாம் என பாஜக செயல்பட்டு வருவதாகவும் குற்றசாட்டினார். மதத்தை வைத்து பாஜக ஆட்சியை பிடிப்பது […]
முன்னாள் முதல்வர் நாராயணசாமி வீட்டில் பைப் வெடிகுண்டு வைக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேருமே குற்றவாளிகள் என தீர்ப்பு. புதுச்சேரியில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எல்லையம்மன் கோவில் வீதியில் உள்ள முன்னாள் முதல்வர் நாராயணசாமி (மத்திய அமைச்சராக இருந்தபோது) வீட்டில் பைப் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வந்த நிலையில், தேசிய புலனாய்வு அமைப்பின் கீழ் கொண்டுவரப்பட்டது. அந்த விசாரணையில் தமிழர் விடுதலை படையை சேர்ந்த திருச்செல்வம் உள்பட 6 […]
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் சுமார் ஐந்து லட்சம் மதிப்புள்ள 149 தங்க காசுகள் பறக்கும்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காரைக்கால் திருநள்ளார் தொகுதியில் பறக்கும் படையினர் சோதனை செய்தபோது 149 தங்க காசுகள் ரூ.90 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.பறக்கும் படையினர் சோதனை செய்தபோது இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்தனர்.அவர்கள் காவல்துறையினர் கண்டதும் தாங்கள் வைத்திருந்த பையை தூக்கி வீசி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிச் சென்றுள்ளனர். காவல்துறையினர் அதனை […]
வருமான வரித்துறை சோதனைக்கு புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளார். வருமான வரித்துறையினர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கு திமுக பிரபலங்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அதிமுகவும், பாஜகவும் தோல்வி பயத்தால் வருமான வரித்துறையை ஏவி விட்டு, மு.க.ஸ்டாலினின் குடும்பத்திற்கு களங்கம் விளைவிக்க வேண்டும், மக்களை மத்தியில் தவறான […]
புதுச்சேரியில் மதச்சார்பற்ற கூட்டணி மிக பலமாக இருக்கிறது என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். தமிழகத்தில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் தொகுதி பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் கட்சி தலைவர் ஏ.வி சுப்பிரமணியன் திமுக நிர்வாகிகள் சிவா, சிவக்குமார் உள்ளிடோர் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி காங்கிரஸ், திமுக, […]
புதுச்சேரி மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிலும் காங்கிரஸ் கட்சி காணாமல் போகும் என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று புதுச்சேரியில் நடைபெற்று வரும் பாஜக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், வரும் தேர்தலில் புதுச்சேரியில் பாஜக தலைமையிலான ஆட்சி அமையும் என கூறியுள்ளார். பொய் பேசுபவர்களுக்கு விருது வழங்க வேண்டும் என்றால் அதை நாராயணசாமிக்கு தான் தரவேண்டும் என விமர்சித்துள்ளார். புதுச்சேரியில் ஊழலை வளர்க்கும் வேலையை மட்டுமே […]
புதுச்சேரி மாநிலத்திற்கு புதிதாக எந்தவொரு திட்டத்தை பிரதமர் மோடி அறிவிக்கவில்லை என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, புதுச்சேரி மாநிலத்திற்கு புதிதாக எந்தவொரு திட்டத்தை பிரதமர் மோடி அறிவிக்கவில்லை என்று குற்றம் சாட்டிய அவர், பிரதமர் மோடி மக்களை திசை திருப்ப பொய்யான தகவல்களை கூறிவருவதாக தெரிவித்தார். மேலும், பண பலம் மற்றும் அதிகார பலம் காரணமாக ஆட்சிக்கு […]
பொய் கூறுவதையே கலாச்சாரமாக கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியால் மக்களுக்கு எப்படி சேவை செய்ய முடியும்? சமீபத்தில் புதுச்சேரி சென்ற காங்கிரஸ் கட்சியின் எம்.பி.ராகுல் காந்தி, சோலை நகர் பகுதியில் உள்ள கடலோர மக்களோடு உரையாற்றினார். அப்போது பேசிய மூதாட்டி ஒருவர், மழை, புயலினால் பாதிக்கப்பட்ட போது, புதுச்சேரி முதல்வரான நாராயணசாமி சந்தித்து, நிவாரணம் வழங்கவில்லை என குற்றம்சாட்டினார். ஆனால், புதுச்சேரி முதல்வர், அதை ராகுல் காந்தியிடம் மொழி பெயர்த்து கூறும் போது, மழை, புயலினால் பாதிக்கப்பட்ட போது சந்தித்து […]
திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள், எனக்கு ஆதரவாக ட்வீட்டரில் பதிவிட்டிருந்த பதிவை என்னை மகிழ்ச்சி அடைகிறேன். புதுச்சேரியில் 5 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் ஒரு திமுக எம்எல்ஏ தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ததால், சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பானமையை நிரூபிக்க முடியாத நிலையில், காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்ததாகவும், சட்டப்பேரவையில் நாராயணசாமி கொண்டுவந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் தோல்வியை சந்தித்துள்ளது என்றும் சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து நாராயணசாமி […]
ஜனநாயகம் காப்பதில் முதலமைச்சர் நாராயணசாமியின் துணிச்சலை வாழ்த்துகிறேன் என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்திருந்தார். இதையடுத்து, முதல்வர் நாராயணசாமி தனது பதவியை ராஜினாமா செய்வதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து கடிதத்தை அளித்திருந்தார். இந்நிலையில், இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், திரைமறைவு பேரங்கள் – ஜனநாயகப் படுகொலையை […]
பெரும்பான்மையை இழந்த நிலையில், துணை நிலை ஆளுநரை சந்திக்க முதல்வர் ஆளுநர் மாளிகைக்கு செல்கிறார். புதுச்சேரி நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமி கொண்டுவந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் தோல்வியடைந்ததாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். மத்திய பாஜக அரசு மற்றும் எதிர்க்கட்சிகள் மீது கடும் விமர்சனங்களை முன் வைத்து பேசிய முதல்வர் நாராயணசாமி பேரவையில் இருந்து வெளியேறினர். இந்நிலையில், புதுச்சேரி அரசு பெரும்பான்மையை இழந்த நிலையில், துணை நிலை […]
இன்னும் சற்று நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அவர்கள், துணை சபாநாயகர் பாலன் இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். புதுச்சேரியில் காங்கிரஸ் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததை தொடர்ந்து, முதல்வர் நாராயணசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், புதுச்சேரியின் புதிய துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்றுள்ள தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள், முதல் அமைச்சர் நாராயணசாமி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார். இன்னும் சற்று நேரத்தில் நம்பிக்கை […]
புதுச்சேரி அரசியல் களம் பரபரப்பாக காணப்படும் சூழலில், இன்று காலை 10 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. புதுச்சேரியில் காங்கிரஸ் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததை தொடர்ந்து, முதல்வர் நாராயணசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், புதுச்சேரியின் புதிய துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்றுள்ள தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள், முதல் அமைச்சர் நாராயணசாமி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார். மேலும் இன்று மாலை 5 மணிக்குள் வாக்கெடுப்பு நிறைவு செய்ய […]
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்களுடன் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் இன்று அவரச ஆலோசனை நடத்துகிறார். புதுச்சேரியில் 4 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமாவை தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. புதிய துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றுள்ள தமிழிசை சவுந்தரராஜன், நாளை பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதலமைச்சர் நாராயணசாமிக்கு உத்தரவிட்டிருந்தார். நாளை மாலை 5 மணிக்குள் வாக்கெடுப்பை நிறைவு செய்யவும், முழு நிகழ்வையும் வீடியோ பதிவு செய்யவும் ஆளுநர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்களுடன் முதலமைச்சர் நாராயணசாமி […]
பிழை செய்யமாட்டேன், வரலாற்று சரித்திரம் படைப்பேன் என பொறுப்பு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரிக்கு உட்பட்ட கரைகளுக்கு இன்று சென்ற தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஆட்சியர் அலுவலகத்தில் அணி வகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது. அதை ஏற்ற தமிழிசை முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் மருத்துவமனையை ஆய்வு செய்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், எல்லோரும் தங்களது முறை வரும்போது, கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்களுக்கு கொடுப்பது, அவர்கள் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றினார்கள், […]
ஆளுநர் அளித்த கடிதத்தில் மிகப்பெரிய தவறு உள்ளது. இது பற்றி எனக்கு விளக்கம் தர ஆளுநருக்கு கடிதம் அனுப்பி உள்ளேன் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் கிரண்பேடி நீக்கத்தை தொடர்ந்து, புதிய ஆளுநராக தெலுங்கானா மாநில ஆளுநராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக பதவியேற்றார். இந்நிலையில் அவர் பதவியேற்ற நாள் அன்று, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அழைத்து, வரும் 22ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் […]
புதுச்சேரியில் நடக்கும் குழப்பத்திற்கு அந்த மாநில முதலமைச்சர் நாராயணசாமி தான் காரணம் என்று எல் முருகன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் பதவி ராஜினாமாவை தொடர்ந்து, தற்போது காங்கிரஸ் கூட்டணி பலம் 14 ஆகவும், எதிர்க்கட்சி கூட்டணி பலம் 14 ஆகவும் உள்ளது. இரு அணிகளுக்கு சமபலம் உள்ள நிலையில், வரும் 22ஆம் தேதி சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் நாராயணசாமி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, புதுச்சேரியில் நியமன உறுப்பினர்களுக்கு வாக்கு உரிமை உள்ளதால் […]
புதுச்சேரியில் பெரும்பான்மை வாக்கெடுப்பின் போது, நிச்சியம் வாக்களிக்க உள்ளதாக பாஜக நியமன எம்எல்ஏக்கள் தெரிவித்துள்ளார்கள். புதுச்சேரியில் சட்டசபையில் காங்கிரஸ் கூட்டணி 14 உறுப்பினர்களும் மற்றும் எதிர்க்கட்சி கூட்டணியில் 14 உறுப்பினர்களும் உள்ளதால், முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் வலியுறுத்தி வந்த நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு பிப்.22-ஆம் தேதி பெருபான்மையை நிரூபிக்க உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்நிலையில், புதுச்சேரியில் நியமன உறுப்பினர்களுக்கு வாக்கு உரிமை […]