வரப்போகும் மோசமான நிலைக்கு தயாராகுங்கள் – ஹரியானா முதல்வர்!

The Haryana Chief Minister has instructed the state authorities to prepare for the worst case scenario caused by the Omigron virus.

ஓமிக்ரான் வைரஸால் வரப்போகும் மோசமான நிலைக்கு தயாராகுங்கள் என ஹரியானா முதல்வர் அம்மாநில அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸின் தாக்கமே தற்பொழுது வரை குறையாத நிலையில் இந்த கொரோனா வைரஸ் புதியதாக உருமாறி பல நாடுகளிலும் பரவி வருகிறது. அந்த வகையில் தற்போது தென் ஆப்பிரிக்கா நாட்டிலும் கொரோனா வைரஸ் உருமாறி உள்ளது. இந்த வகை வைரஸுக்கு ஓமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த வைரஸிலிருந்து இருந்து நாட்டை பாதுகாப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஹரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் அவர்கள் இது குறித்து கூறுகையில், ஓமிக்ரான் வைரஸ் பரவல் நிலைமையை கண்காணிக்க வேண்டும் என மாநிலத்தில் உள்ள அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் வரப்போகும் மோசமான நிலைக்கு தயாராக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்த வைரஸ் வழக்குகள் இதுவரை ஹரியானா மாநிலத்தில் இல்லை. ஆனால் மாநிலத்தின் 140 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது என தெரிவித்துள்ளார். எனவே மாநிலத்தின் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.