2022 வரை இலவச ரேஷன் திட்டம் நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு ...!

The federal government has announced that the free ration scheme will be extended till 2022.

2022 ஆம் ஆண்டு வரை இலவச ரேஷன் வழங்கும் திட்டம் நீடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவல் தொடங்கியதில் இருந்து முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனை அடுத்து பிரதம மந்திரியின் கல்யாண் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள 80 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச ரேஷன் அரிசி மற்றும் கோதுமை வழங்கப்பட்டு வருகிறது. கொரோனவால் பாதிக்கப்பட்டோருக்கும், ஊரடங்கால் நலிவடைந்தோருக்கும் உதவும் வகையில் மூன்று மாதங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டம் 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது.

ஆனால், இந்தத் திட்டம் இனி நீக்கப்பட மாட்டாது என மத்திய அரசு சார்பில் முன்னதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த திட்டம் 2022ஆம் ஆண்டு மார்ச் வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், ஏழைகளுக்கு 2022 ஆம் ஆண்டு மார்ச் வரை இலவசமாக ரேஷன் கிடைக்கும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த தகவலை மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் அவர்கள் தெரிவித்துள்ளார்.