ஜெயலலிதா நினைவிடம் ! ஜனவரி 27-ஆம் தேதி திறந்துவைக்கிறார் முதலமைச்சர்

Former Tamil Nadu Chief Minister Jayalalithaa's memorial in Marina to be inaugurated on January 27th by CM Palaniswami

ஜெயலலிதா நினைவிடத்தை வருகின்ற 27-ஆம் தேதி  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைக்கிறார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் ,சென்னை காமராஜர் சாலையில் உள்ள பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவிட  வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்தை வருகின்ற 27-ஆம் தேதி அன்று காலை 11 மணியளவில் தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் தலைமையேற்று திறந்து வைக்க உள்ளார்கள்.துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவர் ,அமைச்சர் பெருமக்கள்,சட்டப்பேரவை துணைத்தலைவர்,நாடாளுமன்ற உறுப்பினர்கள் , சட்டமன்ற உறுப்பினர்கள், வாரியத் தலைவர்கள் மற்றும் சீர்மிகு பெருமக்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.