முன்னாள் முதல்வர் கலைஞரின் உதவியாளர் சண்முகநாதன் காலமானார்.
முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் உதவியாளர் கோ. சண்முகநாதன் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் சற்று முன் காலமானார். காவல்துறையில் சுருக்கெழுத்தாளராக பணிபுரிந்து சண்முகநாதன் பின்னர் கலைஞரின் உதவியாளராக பணியில் சேர்ந்தார்.
அபாரமான நினைவாற்றல் கொண்ட கடின உழைப்பாளியான சண்முகநாதன் கலைஞரின் நிழல் என அழைக்கப்பட்டார். கலைஞர் முதலமைச்சராக இல்லாத போதும் அவரது உதவியாளர் பணியில் தொடர்வதற்காக அரசு வேலையை துறந்தவர். 1969-ஆம் ஆண்டு பிப்ரவரியில் கலைஞரின் உதவியாளராகச் சேர்ந்த சண்முகநாதன் கலைஞர் இறக்கும்வரை அவருடனே இருந்தார். 50 ஆண்டுகளாக கலைஞரின் உதவியாளராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.