மருத்துவக் கல்லூரிகளில் இன்று முதல் நேரடி வகுப்புகள் தொடக்கம்!!

With the start of live classes in the first medical colleges in Tamil Nadu today, students are following the guidance of the government.

தமிழகத்தில் இன்று முதல் மருத்துவ கல்லூரிகளில் நேரடி வகுப்பு தொடங்கிய நிலையில், அரசின் வழிகாட்டை பின்பற்றி மாணவர்கள் வருகை.

தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் இன்று முதல் மருத்துவ கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கி இருக்கிறது. இரண்டாம் ஆண்டு முதல் நான்காம் ஆண்டு வரையிலான மருத்துவ கல்லூரி மாணவர்கள் இன்று முதல் கல்லூரிக்கு வர தொடங்கினர்.

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி கல்லூரிகள் செயல்பட தொடங்கியது. கல்லூரிக்கு வரும் மாணவர்கள் அனைவரும் 48 மணி நேரத்திற்கு முன்பாக எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்று மற்றும் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றுகளை வைத்திருப்பது கட்டாயம் என கூறப்பட்டது.

மேலும், தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிவதை கடைபிடிக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய கல்லூரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், கல்லூரிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து மருத்துவ மாணவர்கள் ஆர்வத்துடன், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கல்லூரிக்கு வருகை தந்தனர்.