மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு – தமிழக அரசு

The Government of Tamil Nadu has issued an order giving time to pay the electricity bill.

மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு இன்று முதல் 24ம் தேதி வரை அமலில் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தாழ்வழுத்த மின்நுகர்வோர்களின் மின் கட்டணம், இதர நிலுவை தொகை செலுத்த வரும் 31ம் தேதி வரை கால அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கடைசி நாள் இன்று முதல் 24ம் தேதி வரை இருந்த நிலையில், தற்போது மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

unknown node