இவர்களுக்கு நியாயமான முறையில் பணியிட மாறுதல் கிடைப்பதை உறுதி செய்க – அன்புமணி ராமதாஸ்

பேராசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் ட்வீட்.

பேராசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் ட்வீட்.

பேராசிரியர்களுக்கு நியாயமான முறையில் பணியிட மாறுதல் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், தமிழ்நாட்டில் அரசு கல்லூரி பேராசிரியர்களுக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் கடந்த 4 ஆண்டுகளாக பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படவில்லை.

அதனால் குடும்பத்தைப் பிரிந்து வெளியூர்களில் பணியாற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தகுதியானவர்களுக்கு, நியாயமான, சட்டப்பூர்வ வழியில் இட மாறுதல் வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது தான் பணியிட மாறுதல் கலந்தாய்வு ஆகும். இதில் எந்த முறைகேடுகளும் நடப்பதில்லை. பள்ளிக்கல்வித் துறையில் இந்த முறையில் முறையாக இடமாறுதல் வழங்கப்படுகிறது.

அரசு கல்லூரி பேராசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். அதன் மூலம் தகுதியும், தேவையும் உள்ள கல்லூரி பேராசிரியர்களுக்கு நியாயமான முறையில் பணியிட மாறுதல் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

unknown node
இவர்களுக்கு நியாயமான முறையில் பணியிட மாறுதல் கிடைப்பதை உறுதி செய்க – அன்புமணி ராமதாஸ்