#ElectionBreaking: இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு., ஒப்பந்தம் கையெழுத்தானது.!

In the forthcoming assembly elections, the DMK alliance signed an agreement allocating 6 seats to the Communist Party of India.

வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகளை ஒதுக்கி ஒப்பந்தம் கையெழுத்தானது.

திமுகவுடனான தொகுதி பங்கீடு குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இரட்டை இலக்கு எண்ணிக்கையில் தொகுதிகளை வாங்க வேண்டும் என்ற நிலையில் திமுகவுடன் பேச்சுவார்த்தை தொடர் இழுபறி நீடித்து வந்தது. 12 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று பேசப்பட்டு நிலையில், திமுக 6 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என்று நேற்று நடைபெற்ற இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் தெரிவித்திருந்தது.

மேலும், இன்று திமுக – இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் முன்னிலையில், திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து அதற்கான உடன்பாடு கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும், திருத்துறைப்பூண்டி, பவானிசாகர், தளி, சிவகங்கை, அறந்தாங்கி, புதுக்கோட்டை, ஆலங்குடி, ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட 11 தொகுதிகளை கொண்ட விருப்ப பட்டியலை ந்திய கம்யூனிஸ்ட் கட்சி திமுகவிடம் கொடுத்துள்ளது. ஏற்கனவே, திமுக கூட்டணியில் விசிக 6, ஐயூஎம்எல் 3, மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தற்போது சிபிஐ-க்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node