நெருங்கும் சட்டமன்ற தேர்தல் ! தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலான குழு தமிழகம் வருகை

ECI headed by the CEC will visit Chennai on Feb 10 & 11 to review election preparedness in Tamilnadu.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழு வருகின்ற 10-ஆம் தேதி தமிழகம் வர உள்ளனர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது.இதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் தயாராகி வருகின்றது.ஆகவே தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு.அதன்படி தமிழகத்தில்  மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6,26,74,446 என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.இதில் பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 3,18,28,727 ஆகும்.ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 3,08,38,473 என்றும் மூன்றாம் பாலின வக்காளர்கள் எண்ணிக்கை 7,246 என்றும்  தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்திய தலைமை தேர்தல் அதிகாரி தலைமையிலான குழு தமிழகம் வர உள்ளது.வருகின்ற 10 மற்றும் 11-ஆம் தேதிகளில் இரண்டு நாள் பயணமாக இந்த குழு தமிழகம் வருகிறது.இந்த குழு அரசியல் கட்சிகள்,மாவட்ட தேர்தல் அதிகாரிகள் உட்பட பல தரப்பினருடன் ஆலோசனை நடத்த உள்ளது.