அதிமுக பொதுக்குழு நேற்று சலசலப்புடன் நடைபெற்ற நிலையில்,இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியது.ஜூலை 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால்,டெல்லி புறப்படுவதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ்,பாஜக சார்பாக குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திரௌபதி முர்மு இன்று வேட்புமனுவை தாக்கல் செய்வதை முன்னிட்டு அந்த நிகழ்வில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்ததால்,டெல்லி செல்கிறேன் என தெரிவித்திருந்தார்.இதனிடையே,பொதுக்குழு கூட்டத்தில் உயர்நீதிமன்றம் […]
அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்த சர்ச்சையால் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பு என இரு அணிகளாக பிரிந்து,சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று பல்வேறு பிரச்சனைக்கு மத்தியில் நடைபெற்றது.ஆனால்,பொதுக்குழுவில் ஓபிஎஸ் ஒப்புதல் தந்த 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டது.மேலும்,அதிமுக அவைத் தலைவர் ஓபிஎஸ் ஒப்புதல் இல்லாமல் தேர்தெடுக்கப்பட்டார். மேலும்,இதனையடுத்து,அதிமுகவின் அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி காலை 9.15-க்கு கூடும் என்று அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்தார்.இந்த நிலையில்,அதிமுக பொதுக்குழு மேடையிலிருந்து […]
இந்தியாவின் 15 வது குடியரசு தலைவராக ராம்நாத் கோவிந்த் அவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு பதவியேற்ற நிலையில்,அவரின் பதவிக்காலம் வருகின்ற ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.இதனால்,அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில்,குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்குகிறது என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.மேலும்,ஜூன் 29-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய […]
தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு ஜூன்10-ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் முன்னதாக அறிவித்தது.அதன்படி,தமிழ்நாட்டில் 6 இடங்கள் உட்பட மாநிலங்களவை உறுப்பினர்கள் 57 பேரை தேர்வு செய்ய ஜூன் 10 இல் தேர்தல் நடைபெறுகிறது. இதனிடையே,தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை எம்பிக்களின் பதவிக்காலம் ஜூன் 29ல் முடிவடைய உள்ள நிலையில்,தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, ஆர்எஸ் பாரதி, டிகேஎஸ் இளங்கோவன்,ராஜேஸ்குமார், நவநீதகிருஷ்ணன், எஸ்ஆர் பாலசுப்பிரமணியன் மற்றும் ஏ.விஜயகுமார் ஆகிய 6 எம்பிகளின் […]
தமிழ்நாட்டில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன்10ல் தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு. தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு ஜூன்10-ஆம் தேதி மாநிலங்களைவர் தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 6 இடங்கள் உட்பட மாநிலங்களவை உறுப்பினர்கள் 57 பேரை தேர்வு செய்ய ஜூன்10ல் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை எம்பிக்களின் பதவிக்காலம் ஜூன் 29ல் முடிவடைய உள்ள நிலையில், தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, […]
இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா வருகின்ற மே 14 ஆம் தேதியுடன் ஓய்வு பெரும் நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் புதிய தலைவராக ராஜீவ் குமாரை நியமனம் செய்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து இதுவரை 24 பேர் தலைமை தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட்ட நிலையில்,சுசில் சந்திரா 24 வது தலைமை […]
அரசியல் கட்சிகள் இலவசம் வழங்குவதை தடுக்க முடியாது என தேர்தல் ஆணையம் தகவல். அரசியல் கட்சிகள் இலவச திட்டங்களை வாக்குறுதிகளாக அறிவிப்பது அக்கட்சிகளின் கொள்கை சார்ந்த முடிவுகளாகும்.மேலும்,தேர்தலுக்கு முன்போ,பின்போ இலவசங்கள் வழங்குவது என்பது கட்சிகளின் கொள்கை முடிவுகளாகும். இதனால்,இலவச திட்டங்கள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் கொள்கைகள், முடிவுகளை தேர்தல் ஆணையம் முறைப்படுத்த முடியாது என உச்சநீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் வரிப்பணத்தைக் கொண்டு இலவச திட்டங்களை தேர்தல் வாக்குறுதிகளாக அரசியல் […]
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,”ஒரு நாடு ஒரே தேர்தல்” மற்றும் “ஒரு நாடு,ஒரே வாக்காளர் பட்டியல்” குறித்து விவாதங்கள் நடக்கட்டும், அதன்மூலம் ஆரோக்கியமான கருத்துக்கள் வெளிவரட்டும்”,என்று முன்னதாக கூறியிருந்தார்.இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகள் எதிர்ப்பும்,சில கட்சிகள் ஆதரவும் தெரிவித்தன. இதற்கிடையில்,உ.பி,கோவா,பஞ்சாப்,மணிப்பூர் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில்,ஒரே நாடு,ஒரே தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவதற்குத் தயாராக உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையத்தின் […]
ராஜ்யசபா உறுப்பினர்களான ஆனந்த் சர்மா, ஏ.கே. ஆண்டனி, பர்தாப் சிங் பாஜ்வா, நரேஷ் குஜ்ரால் என பல தலைவர்கள் அடுத்த மாதம் ஓய்வு பெற உள்ளதால் மாநிலங்களவை தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், கேரளா, அசாம், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் காலியாகவுள்ள எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, பஞ்சாபில் 5, கேரளாவில் 3, அசாமில் 2, ஹிமாச்சலப் பிரதேசம், திரிபுரா மற்றும் நாகாலாந்தில் தலா ஒரு இடங்கள் காலியாகவுள்ளது. இதனால், […]
திருப்பத்தூர் டி.எஸ்.பி தங்கவேலுவை பணியிடைநீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு திருப்பத்தூர் டிஎஸ்பி தங்கவேலுவை சஸ்பெண்ட் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அமைச்சர் கே.சி வீரமணிக்கு ஆதரவாக செயல்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. கடந்த 25-ம் தேதி அமைச்சர் கே.சி வீரமணியின் சகோதரர் அழகிரி காரில் பரிசுப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பரிசுப்பொருள்கள் பறிமுதல் பற்றி வழக்குப்பதிவு செய்வதில் ஆளுங்கட்சிக்களுக்கு சாதகமாக டி.எஸ்.பி தங்கவேலு செய்யப்பட்டதாக புகார் கொடுக்கப்பட்டது. தேர்தல் […]
மனிதநேய மக்கள் கட்சிக்கு கத்திரிகோல் சின்னம் ஒதுக்கீடு செய்தது இந்திய தலைமை தேர்தல் ஆணையம். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனால், அரசியல் கட்சிகளுக்கு சின்னத்தை ஒதுக்கி இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்து வருகின்றது. இதைத்தொடர்ந்து, திமுக கூட்டணியில் உள்ள மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மனிதநேய மக்கள் கட்சிக்கு கத்தரிக்கோல் சின்னத்தையும், மை இந்தியா பார்டிக்கு சிசிடிவி கேமிரா சின்னத்தை இந்திய தேர்தல் […]
தமிழகம் உட்பட 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்குவங்கம் சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் விரைவில் நிறைவடைகிறது.ஆகவே தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழகம் உட்பட 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் 88,956 வாக்கு மையங்கள், ஒரு மையத்தில் அதிகபட்சமாக 1000 […]
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழு வருகின்ற 10-ஆம் தேதி தமிழகம் வர உள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது.இதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் தயாராகி வருகின்றது.ஆகவே தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு.அதன்படி தமிழகத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6,26,74,446 என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.இதில் பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 3,18,28,727 ஆகும்.ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 3,08,38,473 என்றும் மூன்றாம் […]
மே மாதத்தில் வெயில் அதிகம் என்பதால் முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என்று பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை பதிவிக்கலாம் வரும் மே 24-ம் தேதியுடன் முடிவடைவதை தொடர்ந்து, இந்திய தேர்தல் ஆணைய பொதுச் செயலாளர் உமேஷ் சின்கா தலைமையிலான உயர்மட்ட குழு இன்று தமிழகம் வந்தது.பின்பு இந்த தேர்தல் ஆணையம் குழுவினர் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளை அழைத்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.ஆலோசனைக்கு பின்னர் அதிமுகவின் பொள்ளாச்சி ஜெயராமன் கூறுகையில், ஏப்ரல் மாதத்தில் சட்டசபைத் தேர்தலை […]
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து இன்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழகம் வர உள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் தயாராகி வருகின்றது.தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும் ,கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்பும் அறிவித்து வருகின்றன.எனவே 2021-ஆம் ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்நிலையில் […]
மக்கள் நீதி மய்யத்திற்கு டார்ச் லைட் கிடைக்காத நிலையில்,தங்களுக்கு டார்ச் லைட் சின்னம் வேண்டாம் என்று எம் ஜி.ஆர் மக்கள் கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சின்னங்களை ஒதுக்கீடு செய்தது.அதன்படி, தேர்தல் ஆணையம் புதுச்சேரியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு “டார்ச் லைட்” சின்னத்தை ஒதுக்கியது.ஆனால் தேர்தல் ஆணையம் தமிழகத்தில் எந்த சின்னமும் ஒதுக்கவில்லை. அதேநேரத்தில், தமிழகத்தில் எம்.ஜி.ஆர் மக்கள் கட்சிக்கு “ டார்ச் லைட்” சின்னத்தை ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.தமிழகத்திற்கு சின்னம் ஒதுக்கப்படாத […]
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து டிசம்பர் 21,22-ஆம் தேதிகளில் இந்திய தேர்தல் ஆணைய அதிகரிகள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் தயாராகி வருகின்றது.தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும் ,கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்பும் அறிவித்து வருகின்றன.எனவே 2021-ஆம் ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழக தேர்தல் […]
80 வயதுக்கு மேற்பட்டோரிடம் வீட்டுக்குச் சென்று தபால் வாக்கை பெறும் முறை, ஜனநாயகத்தின் உயிர்நாடியான ரகசிய வாக்களிப்பை சவக்குழியில் தள்ளும் அபாயச் செயல் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,பீகார் மாடல்’ கடைப்பிடிக்கப்பட வேண்டும் என அனைத்து மாநிலத் தேர்தல் அதிகாரிகளுக்கும் இந்தியத் தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பி பேரதிர்ச்சி அளித்திருக்கிறது.பீகார் தேர்தலில், 80 வயதுக்கு அதிகமான மூத்த குடிமக்களும் மாற்றுத் திறனாளிகளும் ‘வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்கள்(Absentee voters) என்ற […]
மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் 3 கட்டமாக நடைபெறுகிறது. இதனிடையே பா.ஜ.க தேர்தல் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அதில், பீகாரில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இது பெரும் விவாதமாக […]
நாடு முழுவதும் காலியாக உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்களை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த சமயங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.குறிப்பாக தேர்தல் நடத்தப்படவில்லை. எனவே நாடு முழுவதும் காலியாக உள்ள தொகுதிகளுக்கு தேர்தல் எப்போது? என்று இந்திய தலைமை தேர்தல் ஆணைய உயர் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர் .ஆலோசனையில் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் மாநில தேர்தல் அதிகாரிகள் காணொளி காட்சி மூலமாக […]